சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்படும் 9 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்படும் 9 மாடி கட்டிடத்தில் தீ விபத்து
X

சென்னை வேளச்சேரியில் 9 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

A fire broke out in a newly constructed 9-storey building in Velachery, Chennai

சென்னை வேளச்சேரி முக்கியமான ஒரு வர்த்தக பகுதி ஆகும். மேலும் பங்களாக்கள் நிறைந்த குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. இந்நிலையில் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகே பிரதான சாலையில் உள்ள 9 மாடி கட்டடத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த 9 மாடி கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கு பின்புறம் குடியிருப்புகள் இருப்பதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். தீ விபத்து எதிரொலியால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி அறிவிறுத்தப்பட்டு வருகிறது. சென்னை நகரில் உள்ள அனைத்து தீயணைப்பு வாகனங்களும் வேளச்சேரிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. ராட்சத ஏணிகள் கொண்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு பணி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!