சென்னையில்நாளை28ம் தேதி ஆடை அலங்கார கண்காட்சி

பைல் படம்.
தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆடை அலங்கார கண்காட்சி விழா 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் அனிதா மனோகர் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். இந்தியாவிலுள்ள ஐந்து முன்னணி ஆடை வடிவமைப்புக் கல்வி நிறுவனங்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது.
சென்னையிலுள்ள நிஃப்ட் நிறுவனம் ஆடை வடிவமைப்பு தொடர்பான கண்காட்சியை நடத்த உள்ளது. மாணவர்களின் நான்காண்டு கல்வியின் கடின உழைப்பு மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி 28.05.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு துறையைச் சேர்ந்த மாணவர்களின் சிறந்த வடிவமைப்புகளும், செயல்முறைத் திட்டங்களும் கௌரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு பேராசிரியர் அனிதா மனோகர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu