LPG Price Hike: முதல் நாளிலேயே பெரும் அதிர்ச்சி..! கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

LPG Price Hike: முதல் நாளிலேயே பெரும் அதிர்ச்சி..! கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
X

பைல் படம்.

LPG Price Hike: இந்த ஆண்டின் முதல் நாளிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LPG Price Hike: ஆங்கிலப் புத்தாண்டு 2023 இன்று முதல் தொடங்குகிறது. புத்தாண்டுடன், சாமானிய மக்களுக்கு பணவீக்கத்தின் மற்றொரு அடி கிடைத்துள்ளது. இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. கேஸ் சிலிண்டர் விலையில் ரூ.25 வரை உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மட்டுமே இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பழைய விலையிலேயே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் இன்று வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வெவ்வேறு நகரங்களில் சமயைல் எரிவாயு சிலிண்டர் எவ்வளவு விலையில் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு:

புத்தாண்டு தொடக்கம் அதாவது ஜனவரி 1, 2023-ல் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இல்லத்தரசிகளின் பட்ஜெட் பாதிக்கப்படபோவதில்லை என்றே சொல்லலாம். ஆனால் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்ந்ததால் உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றில் உணவு விலை உயர்ந்தது. புதிய கட்டணங்களும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வர்த்தக சிலிண்டர் உயர்வால் பாதிக்கப்படுவது நிறுனவனங்கள் அலல.. பொதுமக்களே எனக் கூறலாம். இது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 பெருநகரங்களில் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை:

டெல்லி - சிலிண்டருக்கு ரூ.1769

மும்பை - சிலிண்டருக்கு ரூ.1721

கொல்கத்தா - சிலிண்டருக்கு ரூ.1870

சென்னை - சிலிண்டருக்கு ரூ.1917

4 பெருநகரங்களில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை:

டெல்லி - சிலிண்டருக்கு ரூ.1053

மும்பை - சிலிண்டருக்கு ரூ.1052.5

கொல்கத்தா - சிலிண்டருக்கு ரூ.1079

சென்னை - சிலிண்டருக்கு ரூ.1068.5

நாடு முழுவதும் நீண்ட காலமாக வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடைசியாக ஜூலை 6, 2022 அன்று எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையை ரூ.50 உயர்த்தியது. இதனால் சிலிண்டர் விலையில் மொத்தம் ரூ.153.5 உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், 2022 ஆம் ஆண்டில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை நான்கு முறை மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்