தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
X

தலைமை செயலகம்

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்ற நிலையில் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமையிட ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த வெங்கடராமன் கூடுதலாக நிர்வாக பிரிவையும் கவனிப்பார்.

போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபி பதவி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதுகனிப்பார்.

கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோவை போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அசோக் குமார், சென்னை சைபர்கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாகை கடலோர காவல்படை கண்காணிப்பாளர் செந்தில்குமார், தமிழ்நாடு கமாண்டோ படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பியாக இருந்த ராமர், நாகை கடலோர காவல்படை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business