/* */

தமிழகத்தில் நாளை 8-வது கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் நாளை 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

தமிழகத்தில் நாளை 8-வது கொரோனா தடுப்பூசி முகாம்
X

மாதிரி படம்

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி தொடங்கிய கொரோனா தடுப்பூசி போடும் பணி, தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அதிக பேருக்கு தடுப்பூசி போட வசதியாக மாவட்டங்களில் பல இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 7 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வரும் 6-ந் தேதி (சனிக்கிழமை 8-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சுமார் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. 2-வது தவணை 'கோவேக்சின்' தடுப்பூசி 13 லட்சம் பேருக்கும், 'கோவிஷீல்டு' தடுப்பூசி 48 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட உள்ளது.

தொடர்ந்து 8 வாரமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றாலும், இன்னும் தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதன் அடிப்படையில்தான் வீடுகளுக்கே தேடி சென்று தடுப்பூசி போடப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Nov 2021 1:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  5. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  6. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  7. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  8. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  10. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்