7.5 % ஒதுக்கீட்டு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது: மருத்துவ கல்வி இயக்குநரகம்
பைல் படம்
மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் சேரும் மாணவர்களிடையே, கல்விக் கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உட்பட எவ்வித கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது.
இந்த ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவிகள் , ‘புதுமை பெண் திட்டம்’ நிதியுதவி உட்பட அனைத்து வித கல்வி உதவித் தொகை பெறுவதற்கும் தகுதி உடையவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சில இடர்பாடுகள் இருப்பதால், கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu