அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை 75% மாக்க இலக்கு: அமைச்சர் சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை 75% மாக்க இலக்கு: அமைச்சர் சுப்பிரமணியன்
X

அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை 75% மாக உயா்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது -அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் எண்ணிக்கை 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான 'பிக்மி 2.0' இணையதளத்தில் பேறு காலத்தை சுயமாக பதிவுசெய்து பதிவெண் பெறும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அப்பொழுது அவர் பேசியதாவது, கர்ப்பிணிகள் பச்சிளம் குழந்தைகளுக்கு 11 வகை தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. முழுமையாக தடுப்பூசி பெற்ற குழந்தைகள் 76.1% லிருந்து 90.4% மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 9.31 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கும், 10.21 லட்சம் கா்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75 ஆயிரம் முதல் 81 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில், 60 சதவீத பிரசவங்கள் மட்டுமே, அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அடுத்த இரு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை 75% மாக உயா்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!