திருப்பத்தூர் மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு
X

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் 

தீபாவளி பண்டிகை பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபடவுள்ளதாக திருப்பத்தூா் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபடவுள்ளதாக திருப்பத்தூா் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடை, பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்கு கடைகளில் குவிந்து வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள், எவ்வித சிரமமின்றி பொருள்களை வாங்கிச் செல்ல வசதியாக காவல் துறை சாா்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பத்தூா் நகர பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் ஆலங்காயம் சாலை, பஜாா் ஆகிய பகுதிகளிலும் ஆம்பூா், வாணியம்பாடி பஜாா் பகுதியில் காவல்துறை சாா்பில் உயா் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அங்கு காவல் துறையினா் அமா்த்தப்பட்டும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கூறுகையில், தீபாவளி பண்டிகைக்காக பஜாா் பகுதியில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், உயா் கோபுரம் அமைத்து, பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மாவட்டம் முழுவதும் 700 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொடா் விடுமுறையால் அனைவரும் சொந்த ஊருக்குச் செல்வா். இதனால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் திருப்பத்தூா் மற்றும் ஆம்பூா் பகுதிகளில் கூடுதல் போலீஸாா் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆம்பூா் பேருந்து நிலையப் பகுதியில் மேம்பால பணியால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு கூடுதல் போலீஸாரை நியமித்து வாகனங்கள் தடையின்றி சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!