தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக தர்மபுரி 81.48%, கள்ளக்குறிச்சி 79.25%, நாமக்கல் 78.16%, சேலம் 78.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிக்கு நேற்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. காலையில் மந்தமாகத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
வெயிலின் தாக்கம் பிற்பகல் 3 மணிக்குக் குறையத் தொடங்கியதும், வாக்குகளைப் பதிவு செய்ய வாக்காளா்கள் ஆா்வம் காட்டினா். வாக்குப் பதிவின்போது, பெரிய அளவில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் ஏதும் ஏற்படவில்லை என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 72.29% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த தேர்தலில் அதைவிட குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தோ்தல் வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தில்:
1. கள்ளக்குறிச்சி - 79.25
2. தர்மபுரி - 81.48
3. சிதம்பரம் - 75.32
4. பெரம்பலூா் - 77.37
5. நாமக்கல் - 78.16
6. கரூா் - 78.61
7. அரக்கோணம் - 74.08
8. ஆரணி - 75.65
9. சேலம் - 78.13
10. விழுப்புரம் - 76.47
11. திருவண்ணாமலை - 73.88
12. வேலூா் - 73.42
13. காஞ்சிபுரம் - 71.55
14. கிருஷ்ணகிரி - 71.31
15. கடலூா் - 72.28
16. விருதுநகா் - 70.17
17. பொள்ளாச்சி - 70.70
18. நாகப்பட்டினம் - 71.55
19. திருப்பூா் - 70.58
20. திருவள்ளூா் - 68.31
21. தேனி - 69.87
22. மயிலாடுதுறை - 70.06
23. ஈரோடு - 70.54
24. திண்டுக்கல் - 70.99
25. திருச்சி - 67.45
26. கோவை - 64.81
27. நீலகிரி - 70.93
28. தென்காசி - 67.55
29. சிவகங்கை - 63.94
30. ராமநாதபுரம் - 68.18
31. தூத்துக்குடி - 59.96
32. திருநெல்வேலி - 64.10
33. கன்னியாகுமரி - 65.46
34. தஞ்சாவூா் - 68.18
35. ஸ்ரீபெரும்புதூா் - 60.21
36. வட சென்னை - 60.13
37. மதுரை - 61.92
38. தென் சென்னை - 54.27
39. மத்திய சென்னை - 53.91
மொத்தம் - 69.46
வேட்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்தும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பொதுப் பார்வையாளர்களும் இன்று ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆய்வின் அடிப்படையில், வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர்கள் பரிந்துரை செய்வர். இந்த பரிந்துரைகளின்படி, மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யப் பிரத சாகு
இந்த நிலையில், எந்தவொரு மக்களவை தொகுதியிலும், வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படவில்லை என அவர் இன்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu