பொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X

அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் (கோப்பு படம்).

பொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம் கோட்டம்) சார்பில் 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

15.01.2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும் 12.01.2023, 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களிலும் மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும்

மதுரை, கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரையும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.

மேலும் 12.01.2023 முதல் 14.01.2023 வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும்.

கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16.01.2023, 17.01.2023 மற்றும் 18.01.2023 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil