6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்- முதல்வர் அறிவிப்பு

6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்- முதல்வர் அறிவிப்பு
X

ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!