பேரறிவாளனை 50000 பேர் சிறையில் சந்தித்தனர்: 'அள்ளி' விட்ட சீமான்

பேரறிவாளனை 50000 பேர் சிறையில் சந்தித்தனர்: அள்ளி விட்ட சீமான்
X

கோப்புப்படம்

வேலூர் சிறையில் தான் இருந்தபோது பேரறிவாளனை 50000 பேர் சந்தித்தாக சீமான் கூறியுள்ளார். நடைமுறையில் இது சாத்தியமா?

நாம் தமிழர் கட்சியின் சார்பில் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் மே 18 மாபெரும் இன எழுச்சி பொது கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. தொடர் சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் நடத்தினார். அவரே அவரது விடுதலையை சாத்தியபடுத்தினார். பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது.6 மாதகாலம் நான் வேலூர் சிறையில் அடைபடுவதற்கு முன்பு, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் வேலூர் சிறையில்தான் இருந்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா? நான் வேலூர் சிறைக்கு செல்வதற்கு முன்பு என் தம்பிகளை மொத்தமாக 3000 பேர்தான் பார்த்திருந்தார்கள். நான் சிறையில் இருந்த 6 மாதத்தில் அவர்களை சந்தித்தவர்கள் 50,000 பேர். அதன் பிறகுதான் இவர்கள் இத்தனை ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார்கள் என்பதே வெளியில் தெரியவந்துள்ளது. என்று தெரிவித்தார்.

சீமான் இவ்வாறு கூறியிருப்பதில் எள்ளளவாவது உண்மை உள்ளதா என பார்ப்போம்.


தமிழக சிறைசாலை விதிகளின் படி,

பார்வையாளர்கள் சிறைவாசிகளை சந்திக்க வார நாட்களில் அரசு விடுமுறை நாட்களைத் தவிர காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒவ்வொரு பார்வையாளருக்கும் 30 நிமிடங்கள் வரை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

சிறைவாசிகளின் தன்மைக்கேற்ப பார்வையாளர்கள் அனுமதி

காவல் மற்றும் விசாரணைக் கைதிகளை சந்திக்க அனுமதிக்கும் நாள்: திங்கள், புதன் மற்றும் வெள்ளி

தண்டணை பெற்ற கைதிகள் மற்றும் தடுப்புக் காவல் கைதிகள் சந்திக்க அனுமதிக்கும் நாள்: செவ்வாய் மற்றும் வியாழன்

சிறைவாசிகளின் உறவினர்கள், நண்பர்கள் சிறைவாசிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒரு தடவையில் 3 பேர் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒருவாரத்தில் 3 முறை மட்டுமே காவற் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

தடுப்புக்காவற் கைதிகளை சந்திக்க ஒருவாரத்தில் 2 முறை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

மாதத்திற்கு இருமுறை மட்டுமே தண்டணைக் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். (15 நாட்களுக்கு ஒரு முறை)

இது தான் சிறைச்சாலை விதிகள்

சீமான் கூறியது போல, 50,000 பேர் அவர்களை சந்தித்திருக்க முடியுமா? அவர் சிறையில் இருந்தது ஆறு மாதம், அதாவது 180 நாட்கள். ஒரு கைதியை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கைதியை சந்திக்க முடியும் என்ற விதியின்படி 90 நாட்கள் தான் ஒரு கைதியை சந்திக்க முடியும்.

ஒரு நாளைக்கு மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி என்ற விதிப்படி, ஒரு கைதியை 90 நாட்களில் 270 பேர் தான் சந்திக்க முடியும்.

பேரறிவாளன்,முருகன்,சாந்தன் என மூவரையும் தலா 270 பேர் சந்தித்தாக வைத்துக்கொள்வோம். அப்படியும் மொத்தமே 810 பேர் தான் சந்தித்து இருக்க முடியும்.


இதில் பேரறிவாளனை 50,000 பேர் சந்தித்தனர் எனது சீமான் கூறியிருப்பது, வேலூர் சிறையில் அனைத்து கைதிகளையும் பார்க்க வந்த மொத்த பார்வையாளர்களா? அது சீமானுக்கே வெளிச்சம்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil