தமிழக அரசின் பொங்கல் பரிசு: 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை ரூ.1000, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாயை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும், ஒரு சிலர் பணம் வாங்காமல் இருந்துவிட்டனர். அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, வடசென்னையில் 10,18,728 அட்டைதாரர்கள், தென்சென்னையில் 10,39,552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில், வடசென்னையில் 9 லட்சத்து 83,005 பேரும், தென்சென்னையில் 9 லட்சத்து 90,014 பேரும் ரூ.1000 வாங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்கவில்லை என்று தெரிகிறது.
அத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,026 அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 அட்டைதாரர்களும் திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 அட்டைதாரர்களும் ரூ.1000 பரிசு தொகுப்பு வாங்கவில்லை. 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகை, ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் அரசுக்கு திரும்பி வந்துள்ளதாகவும் கூட்டுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் 7,171 ரேசன் கார்டு தாரர்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,897 திருவண்ணாமலை மாவட்டத்தில் 13,385, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,723 ரேசன் அட்டைதாரர்கள் ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.
அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu