44 ஆவது புத்தகக் காட்சி

44 ஆவது புத்தகக் காட்சி
X
44 ஆவது புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற இருந்த புத்தக காட்சிகள் நடை பெறாமல் போனது. இதனால் பதிப்பாளர்கள் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் தமிழகத்தின் பெரிய புத்தகக் காட்சியான சென்னை புத்தகக் காட்சி ஆரம்பிக்க உள்ளது பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள், வாசகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44 ஆவது புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 14 நான்கு நாட்கள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

வரும் 24-ம் தேதி துவங்க இருக்கும், 44வது சென்னை புத்தகக் காட்சிக்கான புதிய இலட்சினை (லோகோ) வெளியிடப்பட்டது.

Tags

Next Story