தமிழகத்தில் மேலும் 431 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 431 பேருக்கு கொரோனா
X

கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 86 பேர், கோவையில் 54 பேர், செங்கல்பட்டில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் 385 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 866 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 191 பேரும், கோவையில் 481 பேரும், செங்கல்பட்டில் 274 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!