செப்டம்பர் இறுதிக்குள் 4 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்புப்படம் )
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்குவதற்காக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராசிபுரம் தாலுகா போதமலையில் உள்ள கெடமலைக்கு சென்றார். அவர் ஜம்புத்துமலை பகுதியில் இருந்து சுமார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாகவே கெடமலைக்கு சென்றார்.
முன்னதாக ஜம்புத்து மலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் பணி நேரத்தில் சுற்றுலா சென்றதாக புகார் எழுந்தது. மேலும் அங்கு பணியாற்றும் மற்றொரு மருத்துவர், அவரது மகனை சட்டத்திற்கு புறம்பாக அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி செய்ய அனுமதித்ததாகவும் புகார் எழுந்தது.
அது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் புகார் உறுதியானதால் 2 மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ராசிபுரம் அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ₹23.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மருத்துவத் துறையில் 1,021 டாக்டர்கள் உள்பட 4 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. அதை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும்.
அக்னிபத் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதைபோல, ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்வது ஏற்புடையதாக இருக்காது. எனவே மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu