உள்ளுறுப்புகள் நன்றாக இயங்க வாரத்தில் 3 நாள் முருங்கை கீரை சாப்பிடுங்க
முருங்கை கீரையில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன.
மெக்னீசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் ஆகிய தாதுக்களும் நிறைந்துள்ளன. கீரையில் நிறைய வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் இருப்பதால், அது உடலை நன்றாக வளரச் செய்யும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்ல எல்லா பலத்தைத் தரும்.
கண் சம்பந்தமான கோளாறுகளையும் குணப்படுத்தும். பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளையும் முருங்கை கீரை பூரணமாகக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
முருங்கை கீரை காசநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு காசநோய் எதிர்ப்பு மருந்துளால் விளையும் பக்க விளைவுகளைக் குறைக்க உதவுகிறது. முருங்கை கீரை கல்லீரல் செல்களை சீர் செய்வதை துரிதப்படுத்துகின்றன.
கல்லீரல் இரத்த நச்சு நீக்கம், கொழுப்பு வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் கல்லீரல் நொதிகள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அது சரியாக செயல்பட முடியும். முருங்கை கீரைகள் கல்லீரல் நொதிகளை உறுதிப்படுத்துகின்றன.
முருங்கை கீரை மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வாயு, இரைப்பை அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்றவற்றால் அவதிப்படு பவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. எனவே வாரத்தில் குறைந்தது மூன்று நாள் ஒரு வேளை மட்டுமாவது முருங்கை கீரை சாப்பிடுங்க... என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu