தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 273 பேருக்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 273 பேருக்கு பாதிப்பு
X

கோப்புப்படம் 

தமிழ்நாட்டில் மேலும் 273- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 273 பேர் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். இதில், 140 ஆண்கள் மற்றும் 133 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும், கன்னியாகுமரி 24 பேருக்கும், கோவையில் 19 பேருக்கும், சேலத்தில் 14 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகளில் இந்தோனேசியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 31 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,366 ஆக உள்ளது. அதே சமயத்தில் 7 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பும் ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பொது இடங்களில் கூடுவோர் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என தமிழா அரசு அறிவுறுத்தியுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!