2,666 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மேலூர் திருவுடையம்மன் கோவில், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியில் 3400 கோடி ரூபாய் சொத்துக்கள் மட்டுமே மீட்டகப்பட்டதாக தெரிவித்தார்.
இந்தாண்டு 1000கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500கோவில்களின் புணரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும், 1000ஆண்டுகள் பழமையான 80கோவில்கள் 100கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலின் கும்பாபிஷேக நாள் இறுதி செய்யப்பட்டு வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனவும், பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 8கோடி மதிப்பில் தங்கத்தேர் பணிகளும், 150கோடி மதிப்பில் கோவில் திருப்பணிகளும் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
தவறுகளுக்கு இடம் தராமல் சிறப்பாக பணிகள் நடைபெற்று வரும் கோவில்களின் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடாது என்றும் சட்டவிதிகளை மீறி கோவில்களை தவறாக பயன்படுத்தினால் மட்டுமே அறநிலையத்துறை தலையிடும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu