21 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

21 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
X
21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல காவல் உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 21 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் எஸ்.பி.,கள் உள்ளிட்டோரும் மாற்றப்பட்டுள்ளனர்.

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சாம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அசீஷ் ராவத்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விளாத்திகுளம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தாவுக்கு பதவி உயர்வு வழங்கி மாநில குற்றப் பதிவுப் பணியகம் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.







Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!