21 மேயர் பதவிகளில் ஒன்றை காங்கிரசுக்கு ஒதுக்க திமுக முடிவு

21 மேயர் பதவிகளில் ஒன்றை காங்கிரசுக்கு ஒதுக்க திமுக முடிவு
கும்பகோணம் மேயர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்க திமுக முடிவு என்று தகவல் வெளியாகி உள்ளன.

மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி நடக்கிறது. கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமல் இப்பதவிகளை மொத்தமாக கைப்பற்ற முடியும் என்பதால் மேயர் பதவி வேறு யாருக்கும் இல்லை என திமுக மேலிடம் கைவிரித்திருந்தது. இந்நிலையில் கன்னியாக்குமரி மற்றும் சிவகாசி மாநகராட்சியில் மேயர் பதவியை காங்கிரசுக்கு கொடுப்பார்களா? என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. இந்நிலையில் முதலில் மேயர் பதவி கூட்டணி கட்சிகளுக்கு கிடையாது என்ற நிலையில் இருந்த திமுக மேலிடம் தற்போது தங்களுடைய நிலைபாட்டை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் 21 மேயர் பதவிகளில் ஒன்றை காங்கிரசுக்கு ஒதுக்கு திமுக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் பதவியை காங்கிசுக்கு ஒதுக்கப்படாலம் என்று தெரிகிறது.

இதேபோல் காஞ்சிபுரம், சேலம் துணை மேயர் பதவிகளையும் காங்கிரஸ் பெறவுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை துணை மேயர் பதவிகள் வழங்க முடிவு என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story