வேட்பாளர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

நாளை மாலை 6 மணிக்கு லோக்சபா தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்த பிறகு எந்தவொரு அரசியல் கட்சியும் வேட்பாளரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது.
பேஸ்புக், வாட்ஸ் ஆப், எக்ஸ் வலைதளம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது. நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீது 2 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். வெளியூரிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்தவர்கள் நாளை மாலை 6 மணிக்கு தொகுதியில் இருக்கக் கூடாது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களை தங்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது.
தேர்தல் ஏஜென்ட் ஒரு வாகனத்திலும் கட்சிக்காரர்கள் ஒரு வாகனத்திலும் பயணிக்க வேண்டும். வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு முன்பே அரசியல் கட்சியினர் தங்கள் கூடாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாகன அனுமதி நாளை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கென ஒரு வாகனத்தில் பயணிக்கலாம். இவ்வாறு பல்வேறு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu