/* */

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை: 5 நாட்களுக்கான வானிலை 'அப்டேட்'

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை: 5 நாட்களுக்கான வானிலை அப்டேட்
X
வானிலை ஆய்வு மைய வரைபடம்.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (25.05.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை (26.05.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


27ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On: 25 May 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!