சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் 1600 தீவிர தடுப்பூசி முகாம்கள்

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் 1600 தீவிர தடுப்பூசி முகாம்கள்
X

சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமில் தலைமை செயலர் ஆய்வு மேற்கொண்டார் 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில், மொத்தம் 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாநகராட்சிப் பகுதிகளில் 26.8.2021 அன்று 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது, அதில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

12.9.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 21,48,526 முதல் தவணை தடுப்பூசிகள், 7,42,495 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 28,91,021 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (19.09.2021) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில், மொத்தம் 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) விஷு மகாஜன் உடனிருந்தார்.

Tags

Next Story
ai based agriculture in india