தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதவி கலெக்டர்களாக நியமனம்

தமிழகத்தில் ஒரே நேரத்தில்  12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதவி கலெக்டர்களாக நியமனம்
X

தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதவி கலெக்டர்களாக நியமனம்

தமிழகத்தில் ஒரே நாளில் மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேர் 12 மாவட்ட உதவி கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர் அவர்கள் ஏற்கனவே வகித்த துறை மற்றும் எந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை கீழே காணலாம்.

1. இந்திய அரசின் வடகிழக்கு மண்டலங்களின் மேம்பாட்டு உதவி செயலாளராக இருந்த ஆர். சரண்யா ஐ.ஏ.எஸ் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி கலெக்டராக அங்கு ஏற்கனவே உள்ள ஆர். டி. ஓ. தேன்மொழிக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. இந்திய அரசின் நீதித்துறையில் உதவி செயலாளராக இருந்த ஆர். ஐஸ்வர்யா ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சப் கலெக்டராக ஏற்கனவே அங்கு ஆர்.டி.ஓ.வாகப் பணியாற்றி வரும் காயத்ரி சுப்பிரமணிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. இந்திய அரசின் உரத்துறையில் உதவி செயலாளராக இருந்த எஸ். பிரியங்கா ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சப்- கலெக்டர் ஆக அங்கு ஏற்கனவே பணியாற்றி வரும் தாக்கரே சுபம் தினேந்த் ராவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. இந்திய அரசின் திறன் மேம்பாட்டு துறையில் உதவி செயலாளராக இருந்த ஸ்ருத்தஞ்சய் நாராயணன் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் உதவி கலெக்டராக அங்கு ஏற்கனவே ஆர்.டி.ஓ. ஆக பணியாற்றி வரும் பண்டரிநாதனுக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. இந்திய அரசின் விவசாயிகள் நலம் மற்றும் வேளாண்மை துறையில் உதவி செயலாளராக இருந்த கட்டா ரவி தேஜா ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப்- கலெக்டராக அங்கு ஏற்கனவே பணியாற்றி வரும் எம்.பி.அமித் ஐ.ஏ.எஸ். க்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. இந்திய அரசின் என்.ஐ.டி.ஐ.ஆயோக் துறையில் உதவி செயலாளராக இருந்த ஆர். அனாமிகா ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சப் கலெக்டராக அங்கு ஏற்கனவே ஆர்.டி.ஓ. ஆக பணியாற்றி வரும் வினோத்குமாருக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. இந்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தில் உதவி செயலாளராக இருந்த கட்சி ஆர். கௌஷிக் ஐ. ஏ. எஸ். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சப் கலெக்டராக அங்கு ஏற்கனவே பணியாற்றி வரும் அலர்மேலு மங்கை ஐ.ஏ.எஸ்.க்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. இந்திய அரசின் மரபுசாரா எரிசக்தி துறையில் உதவி செயலாளராக இருந்த முகமது சபீர் ஆலம் ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி சப்- கலெக்டராக அங்கு ஏற்கனவே பணியாற்றி வரும் சி. ஏ. ரிஷப் ஐ.ஏ.எஸ். க்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தில் உதவி செயலாளராக இருந்த அப்டாப் ரசூல் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சப் கலெக்டராக அங்கு ஏற்கனவே ஆர்.டி.ஓ.வாக பணியாற்றி வரும் பாத்திமாவுக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10. இந்திய அரசின் சுரங்கங்கள் துறையில் உதவி செயலாளராக இருந்த கௌரவ்குமார் ஐ.ஏ.எஸ். தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சப் -கலெக்டர் ஆக அங்கே ஏற்கனவே பணியாற்றி வரும் ஆர்.டி.ஓ. சிவசுப்பிரமணியனுக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

11. இந்திய அரசின் நீர்வள ஆதாரத்துறையில் உதவி செயலாளராக இருந்த மனோஜ் முருகேந்தர் லால் ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் சப் கலெக்டராக அங்கு ஏற்கனவே ஆர்.டி.ஓ. ஆக பணியாற்றி வரும் முருகேசனுக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

12. இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் உதவி செயலாளராக இருந்த ஸ்வேதா சுமன் ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் சப் கலெக்டராக அங்கு ஏற்கனவே ஆர்.டி.ஓ. ஆக பணியாற்றி வரும் கே. ரவிக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவுகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!