ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு: மருத்துவத்துறை தகவல்

ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு: மருத்துவத்துறை தகவல்
X

டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசு - கோப்புப்படம் 

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை (13 நாட்கள்) தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளது என்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 7 நாட்களில் 11 குழந்தைகள் உட்பட 37 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 வாரத்தில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். இதில் ` நான்கு வகை உண்டு. நல்ல தண்ணீரில் `ஏடிஸ் ஏஜிப்தி' வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும். இந்த வகை கொசுக்கள் மூன்று வாரங்கள் வரை வாழும். பகலில் மட்டுமே கடிக்கும். வீடுகளில் தண்ணீரைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் மூடப்படாத டிரம், காலிமனைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கப்புகள், நீண்ட நாள்களாகச் சுத்தம் செய்யப்படாத குடிநீர்த் தொட்டிகள் போன்றவற்றில் இந்தக் கொசுக்கள் முட்டையிடும். இது டெங்கு பாதிப்புள்ளவரைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.

ஒரு கொசு இருந்தால் அது ஆயிரம் முட்டைகள் வரை இடும். அது பல்கிப் பெருகும். அதேபோல சுத்தமான தண்ணீரில்தான் முட்டையிடும்.

தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் கொசுவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும். கொசு (ஏடிசு) உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவை உற்பத்தியாகும் இடத்தை அழித்தல், இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது.

வீட்டைச் சுற்றி நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருள்களை போட்டுவைக்கக் கூடாது. இவற்றில் நீர் தேங்குவதற்கு வாய்ப்பு இருப்பதால் அதைத் தவிர்க்க வேண்டும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்