100 சதவீத அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

100 சதவீத அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி
X

திரையரங்குகளில் 100 சதவிகித ரசிகர்கள் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அழகிரி, புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் மக்களைப் பற்றி சிந்திக்காமல் அரசு எப்படி திரையரங்கை 100 சதவிகிதம் நிரப்ப அனுமதியளித்தது ?.தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்றே மத்திய, மாநில அரசுகள் தினமும் வெளியிட்டு வரும் தகவல்கள் கூறுகின்றன. மருத்துவ நிபுணர்களும், மத்திய உள்துறை செயலாளரும் எச்சரித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!