100% இருக்கை - நன்றி தெரிவித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வந்தன, தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோருக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு கோரிக்கை வைத்த நடிகர் விஜய், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் மற்றும் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ராஜமன்னார் ஆகியோர்களுக்கும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu