யாராக இருந்தாலும் மரியாதையாக அழைத்து பழகுங்கள் -எழிலன்MLA அட்வைஸ்.

யாராக இருந்தாலும் மரியாதையாக அழைத்து பழகுங்கள் -எழிலன்MLA அட்வைஸ்.
X
"அலோ.. அவர் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ"

அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவில் நியமித்தமைக்கு நன்றி கூற சென்ற எழிலன்MLA காவல்துறைக்கு வகுப்பு எடுத்துள்ளார்.

தன் ஆக்ரோஷத்தைக் குறைக்காத கொரோனா நோய் போக்கை கட்டுப்படுத்தும் தமிழக அரசின் முயற்சிக்கு ஆலோசனை வழங்க முதல்வர் தலைமையில் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நேற்று தமிழ்நாடு அரசு அறிவிச்சிருக்குது. அந்த குழுவில் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், கடந்த ஓராண்டுக்கு மேலாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவருமான மருத்துவர் எழிலன் MLA -வும் நியமிக்கப்பட்டிருக்கார்.

இந்தப் புது குழுவில் நியமித்தமைக்கு நன்றி கூறவும், கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தவும் முதலமைச்சர் மற்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் மருத்துவர் எழிலன் இன்று மதியம் சந்திச்சார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு, ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட இருந்ததால் எழிலன் கீழ் தளத்தில் அவரை வழியனுப்ப காத்திருந்தாராம்.

அப்போ அந்த ஸ்பாட்டில் இருந்த போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனர் கொடிலிங்கம் "ஏய், யார் நீ.. இங்கே நிக்காதே " என்று ஒருமையில் பேசியதைக் கேட்டு. சுற்றியிருந்தோர், "அலோ.. அவர் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ" அப்படீன்னு சொன்னதும் கம்முன்னு இருந்தார்.

அதை அடுத்து முதல்வர் சென்ற பிறகு, தன்னை ஒருமையில் அழைச்சவரை எழிலன் கூப்பிட்டு விசாரிச்சப் போ. "ஆமா.. நாந்தான் அப்படி கூப்பிட்டேன், எம் எல் ஏ-ன்னு தெரியாமல் அழைச்சிட்டேன் …

இங்கே ஏகப்பட்ட பேர் எம்.எல்.ஏ கட்சி கரை வேட்டி கட்டிகிட்டு வருவாங்க.. அதுனாலே …" என்று வழிந்தபடி பதிலளித்த காவல் துணை ஆய்வாளர் கொடிலிங்கத்திடம் ' சட்டமன்ற உறுப்பினர் என்றில்லை யாராக இருந்தாலும் மரியாதையாக அழைத்து பழகுங்கள், அதுமட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்' என்று அட்வைஸ் செஞ்சிட்டு வந்தாராம் எழிலன்

இதே செய்தி இப்படியும் பரவுது : நான் யார் தெரியுமா? போலீசிடம் எம்எல்ஏ வாக்குவாதம்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கார் புறப்படும் நேரத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி உள்ளே வந்த சென்னை ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலனைக் காவல்துறை உதவி ஆணையர் கொடிலிங்கம் தடுத்து நிறுத்தினார்.

அதனை மீறி முதலமைச்சரின் கான்வாய் அருகே சென்றுவிட்டுத் திரும்பிய எம்எல்ஏ எழிலன், தான் யார் தெரியுமா என்று கேட்டுக் காவல் உதவி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பல்வேறு பிரமுகர்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கினர். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தனது இல்லத்திற்குப் புறப்பட ஸ்டாலின் தயாராக இருந்தார்.

இதற்காக முதலமைச்சரின் கான்வாய் அலர்ட் செய்யப்பட்ட நிலையில், திடீரெனச் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், முதலமைச்சருக்கான பாதுகாப்பு நடைமுறைகளை மீறி கான்வாய் இருக்கம் பகுதிக்கு உள்ளே நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு நடைமுறைகளின் படி முதலமைச்சரின் கான்வாய் இருக்கும் பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்பதால், எம்எல்ஏ எழிலனை அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுருந்த உதவி ஆணையர் கொடி லிங்கம், தடுத்து நிறுத்தி நீங்கள், உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் டென்ஷனான எம்எல்ஏ எழிலன் உதவி ஆணையர் தடுத்து நிறுத்தியதையும் பொருட்படுத்தாமல் தான் யார் என்று தெரியுமா? என்று கேட்டபடியே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கார் அருகே சென்றுள்ளார்.

பிறகு முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்ட பிறகு வேகமாக காவலர்கள் இருக்கும் பகுதிக்கு வந்த எம்எல்ஏ எழிலன், யார் அது, என்னைப் பார்த்து யார் நீ எனக் கேட்டது எனக் குரலை உயர்த்திக் கேட்டுள்ளார்.

அதற்குத் தான் தான் கேட்டதாகக் கூறி காவல் உதவி ஆணையர் கொடி லிங்கம் அங்கு வந்தார். அப்போது எம்எல்ஏவான என்னை எப்படி யார் என்று கேட்பீர்கள், மரியாதையோடு நடந்துகொள்ளுங்கள் என மீண்டும் குரலை உயர்த்திப் பேசியுள்ளார் எழிலன்.

அதற்குத் தாங்கள் எம்எல்ஏ என்று தெரியாது எனக் கொடிலிங்கம் கூற, யார் யார் எம்எல்ஏ என்பதைத் தெரிந்து கொள்வதும் உங்கள் வேலை தான் என்று கூறிவிட்டு எம்எல்ஏ எழிலன் அங்கிருந்து புறப்பட்டார்.

அதற்கு முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் தான் தனது கடமையை மட்டுமே செய்ததாகக் காவல் உதவி ஆணையர் கொடிலிங்கம் பதில் அளித்தார்.

இதனிடையே தன்னைக் காவல் உதவி ஆணையர் கொடிலிங்கம் ஒருமையில் பேசியதால் தான் மரியாதையாகப் பேசுங்கள் என்று அறிவுறுத்தியதாகவும், மிரட்டவில்லை என்றும் எம்எல்ஏ எழிலன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!