டாக்டர் தர்மாம்பாள் கண்ணயர்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கிய நாளின்று.

டாக்டர் தர்மாம்பாள் கண்ணயர்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கிய நாளின்று.
X

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் (கோப்பு படம்)

‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்’

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் சித்த மருத்துவம் பயின்று மருத்துவராக பணியாற்றியவர். பெரியாரின் மீதும், பெரியாரின் கருத்துக்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதால், ஒரு கட்டத்தில் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டவர். பெண் கல்வி, கலப்பு மணம், விதவைகளின் மறுமணம் ஆகிய விஷயங்களை கண்போல் போற்றினார், தர்மாம்பாள்.

கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் திருமண அரசின் உதவித் திட்டத்திற்கு 'டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்' என்றே பெயரிடப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, கணவனை இழந்த பெண்ணிற்கு நடக்கும் மறுமணத்துக்கு உதவி தொகை அளிக்கப்படுகிறது.

இவர் பெரும் முயற்சி செய்து, 1938 நவம்பர் மாதம் 13 ஆம் நாள், சென்னையில், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். தனித்தமிழ் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய மறைமலை அடிகளாரின் மகள், நீலாம்பிகை அம்மையார் தலைமையேற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் தான், ஈ. வெ. இராமசாமி அவர்களுக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப் பெற்றது!

மேலும், தர்மாம்பாள் அம்மையார், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் இசையை முன்னேற்றுவதிலும் பெருமுயற்சி எடுத்து வந்தார். 1940 வரையில் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரமோ மற்ற ஆசிரியர்களை போல் நிகரான ஊதியமோ இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆனால் இதுவே உண்மையாக இருந்தது. இந்த நிலையை எதிர்த்து, 'இழவு வாரம்' என்ற பெயரில் கிளர்ச்சி செய்து சாதித்தவர் தர்மாம்பாள் அம்மையார் தான். இவரது முயற்சியாலேயே தமிழ் ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படலாயிற்று.

தமிழ்த் திரை உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய, நடிப்பு, பாட்டு என கொடி கட்டிப் பறந்த, எம்.கே.தியாகராச பாகவதர் அவர்களுக்கு, ஏழிசை மன்னர் என்ற பட்டத்தினையும் வழங்கியவர் இந்த தர்மாம்பாள் தான்

அப்பேர்பட்டவர் தனது 69 வது வயதில், கண்ணயர்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கிய நாளின்று - ஆண்டு 1959.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!