வங்கிகள் செயல்படும் - ஆனால் ஈஸியாக பணம் எடுக்க முடியாது

வங்கிகள் செயல்படும் - ஆனால் ஈஸியாக பணம் எடுக்க முடியாது
X

வங்கி வேலை நேரம் குறைப்பு - தமிழ்நாடு வங்கியாளா்கள் குழுமம்

தொறந்து இருக்கும் - ஆனா வேலை நடக்காது..

கொரோனா காரணமாக தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் 4 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைப்பு.ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் வரும் மே 23ம் தேதி அன்று NEFT சேவை இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனை பின்பற்றி வாடிக்கையாளர்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாம் கட்ட அலையானது மிக தீவிரமாக வீசிக் கொண்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதற்கிடையில் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சேவை நேரமும் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. தினமும் வங்கிகள் 2 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆதார் பதிவு வங்கிகளில் மேற்கொள்ளப்பட மாட்டாது.

காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வங்கிக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு உள்ள வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் பணிபுரியக்கூடிய இணை நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டில் இருந்தே பணிபுரியவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே போல வங்கியில் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!