பட்டாசு நிறுவனம் 22.5 கோடி வரிஏய்ப்பு- பங்குதாரர் கைது

பட்டாசு நிறுவனம் 22.5 கோடி வரிஏய்ப்பு- பங்குதாரர் கைது
X

சிவகாசியில் உள்ள முன்னணி பட்டாசு நிறுவனம் ரூ.22.5 கோடி ஜிஎஸ்டி மற்றும் கலால் வரி ஏய்ப்பு விவகாரத்தில் முக்கிய பங்குதாரர் கைது செய்யப்பட்டார்.

சிவகாசியில் உள்ள முன்னணி பட்டாசு கம்பெனி, ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிவகாசி மற்றும் மதுரையில் அந்த பட்டாசு கம்பெனிக்கு சொந்தமான இடங்கள், கமிஷன் ஏஜென்டுகளின் அலுவலகங்களில், மதுரை மற்றும் கோவை மண்டல சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரக அதிகாரிகள் கடந்த 16 ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.இதில் பட்டாசுகளின் விலை மதிப்பு குறைத்து காட்டப்பட்டது, பணத்தை 3 ஆம் நபர்கள் மூலம் ரொக்கமாக வசூலித்தது போன்றவற்றுக்கான ஆதாரங்கள் சிக்கின.செல்லாத ரசீதுகள் மூலம் பட்டாசுகளை விநியோகித்தது தெரிய வந்தது. ஆனால் டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து வேறுபட்ட மதிப்பில் ரொக்க பணத்தை பெற்றுள்ளனர்.

2016 ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 ம் ஆண்டு ஜூன் வரை இந்த பட்டாசு நிறுவனம் சுமார் ரூ.2.52 கோடி கலால் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது. 2017 ம் ஆண்டு ஜூலை முதல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் வரை இந்த பட்டாசு நிறுவனம் ரூ.20 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளது. பட்டாசு நிறுவனத்தின் அன்றாட கணக்கு வழக்குகளை கவனித்த முக்கிய பங்குதாரர், இதர பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்கள், விற்பனை பிரதிநிதிகள், கமிஷன் ஏஜென்டுகளுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து அவர் மதுரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

Tags

Next Story