பாஜக.,வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு

பாஜக.,வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு
X
அ.தி.மு.க கூட்டணியில் பாஜகவுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக.- பாஜக. இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, அ.தி.மு.க கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!