புத்தாண்டையொட்டி ரூ.159 கோடிக்கு மது விற்பனை

புத்தாண்டையொட்டி ரூ.159 கோடிக்கு மது விற்பனை
X

தமிழகத்தில் புத்தாண்டையொட்டி கடந்த டிசம்பர் 31ம் தேதி மட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

2021 ஆங்கில புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதி மட்டும் ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 48.75 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்து கோவை மண்டலத்தில் ரூ. 28.40 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ. 28.10 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ. 27.30 கோடி என்ற அளவில் மதுபானங்கள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story