பிரதமர் மோடி பிப். 14 ம் தேதி தமிழகம் வருகை

பிரதமர் மோடி பிப். 14 ம் தேதி தமிழகம் வருகை
X

மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை திறந்து வைக்க பிரதமர் மோடி பிப் 14 ம் தேதி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அண்மையில் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்ததுடன், பிரதமரை தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 14 ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களையும் திறந்து வைக்கிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!