உள்துறை அமைச்சர் அமித்ஷா 14 ம் தேதி சென்னை வருகை

உள்துறை அமைச்சர் அமித்ஷா 14 ம் தேதி சென்னை வருகை
X

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14 ம் தேதி சென்னை உர உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கெனவே கடந்த நவம்பர் 21-ல் சென்னை வந்தார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமித்ஷா மீண்டும் வரும் 14-ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க அமித்ஷா சென்னை வர உள்ளார்.அமித்ஷா சென்னை வருகையின்போது, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையில், அவரிடம் அமித்ஷா ஆதரவு கேட்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!