அதிமுக பொதுக்குழு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
X
அதிமுக பொதுக்குழு செல்லும்என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டது.

இதன்பின்னர் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்பேரில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது

நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அளித்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர். ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைகால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் ஓபிஎஸ் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கட்சி அலுவலகம் நுழைவுவாயிலில் சுமார் 50 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil