அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி
X
சென்னை ராயப்பேட்டை அதிமுக கட்சி அலுவலகம் 
ADMK News Tamil - ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர உத்தரவு

ADMK News Tamil -அதிமுக செயற்குழு கூட்டியது செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 11ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தீர்ப்பு வாசித்த நீதிபதி, "ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!