மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற இளையராஜா
இசைஞானி இளையராஜாவின் அடுத்தக் கட்ட பயணம் இன்று தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினராக தனது நியமிக்கப்பட்ட இளையராஜா, இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொண்ட நாளில், இசை அரசரும் பதவியேற்றார். சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா பல சாதனைகளை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிலையில், இன்று மாநிலங்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு முன்னிலையில் அவர் பதவியேற்று கொண்டார். அப்போது அவர் கடவுளின் பெயரால் ஆணை எடுத்து கொள்கிறேன் என்று கூறி பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நியமன எம்.பி.க்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவர்களுக்கு மாநிலங்களவையின் சபாநாயகரான குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது அமெரிக்காவில் இருந்த காரணத்தால் இளையராஜாவால் பதவியேற்பு விழாவுக்கு வர இயலவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu