எப்படி இருந்த விஜயகாந்த்... இப்படி ஆயிட்டாரே... ரசிகர்கள் அதிர்ச்சி

எப்படி இருந்த விஜயகாந்த்... இப்படி ஆயிட்டாரே... ரசிகர்கள் அதிர்ச்சி
X
கம்பீரமாக இருந்த விஜயகாந்தின் தோற்றம் மிகவும் வயதானவர்போல் மாறிவிட்டது.

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். தேமுதிக எனும் கட்சியை துவங்கி அரசியலும் கால் பதித்தவர். தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர். ஆனால், அவரின் முன் கோபம் காரணத்தால் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டவர். மேலும் உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

விஜயகாந்தை பொறுத்தவரை அவரால் சரியாக பேச முடியவில்லை மற்றும் மற்றவர் உதவியின்றி நடக்கவும் முடியாத நிலையில் இருக்கிறார். இப்படி இருக்க அவர் எப்படி நடிப்பார் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களை வைத்தே அவர் எப்படி இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெரிய வருகிறது.

இந்நிலையில், நேற்று அவரின் ஒரு புகைப்படம் வெளியாகி தேமுதிக தொண்டர்களுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தேமுதிக தொண்டர் ஒருவர் விஜகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், விஜயகாந்தின் தோற்றம், அவர் மிகவும் வயதானவர் போல் மாறிவிட்டதுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். விஜயகாந்துக்கு தற்போது 69 வயது ஆவது குறிப்பிடத்தக்கது.




விஜயகாந்த் மிகவும் வயதான தோற்றத்துடன் உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!