முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குண்டாஸ்? அரசியல் வட்டாரங்கள் தகவல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குண்டாஸ்? அரசியல் வட்டாரங்கள் தகவல்
X
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் மீது 3வது வழக்கு நேற்று தொடுக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் மீது முதலில் தொடுக்கப்பட்ட இரு வழக்குகளும் சாதாரணமானவைதான். ஆனால் அதில் ஒரு வழக்கில் கொலை முயற்சி பிரிவு பின்னர் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள இந்த வழக்கு மேலும் வலிமையானதாக பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஜெயக்குமார் மீது புகார் தரப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படாத விவகாரங்களை தூசி தட்டி வருகிறது போலீஸ். இந்த வழக்குகள் வரிசையில் அடுத்து இளம்பெண் சிந்து ஏமாற்றப்பட்ட விவகாரமும் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

இன்னும் சில வழக்குகள் தொடரப்பட்டு ஜெயக்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறுகிறார்கள். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டால், ஒரு வருடம் வரை ஜாமீனில் வெளியே வர முடியாது. அதே நேரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்குத் தொடுத்து அது விசாரணை செய்யப்பட்டு ஒரு வேளை குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும், சில மாதங்களாவது ஜெயக்குமார் சிறையில் இருக்க வேண்டி வரும். அப்படி ஒரு திட்டத்தை தான் இப்போது போலீசார் தீட்டி வருகிறார்கள். அதற்காகத்தான் ஜெயக்குமார் மீது அடுக்கடுக்கான புகார்கள் ஆராயப்பட்டு அடுத்தடுத்து வழக்குகள் பதியப்படுகின்றன" என்று வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!