முதலமைச்சர் முன்பு அமர கூடாதா? பத்திரிகையாளர்கள் கொடுத்த பதிலடி
அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கான இருக்கைகளை அகற்றியதால் அவர்கள் அருகில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலை முன்பு பிரத்யேகமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா கலைஞர் சிலைக்கு முன்பு நின்று கொண்டு முதல்வர் ஸ்டாலின் நீண்ட நெடிய வரிசையில் நின்று வரும் வெற்றி பெற்ற வேட்பாளரை சந்தித்து அவர்களிடமிருந்து புத்தகம் மற்றும் வேட்டியை பெற்றுக்கொண்டிருந்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான்கைந்து மணி நேரம் நின்று கொண்டே வெற்றி பெற்ற வேட்பாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் கேமராமேன்கள் ஆகியோர் அமர்வதற்கு இருக்கைகள் கொடுக்கப்பட்டது. அப்போது பத்திரிகையாளர்கள் சிலர் தங்கள் கால் மீது கால் போட்டு உட்கார்ந்து கொண்டு இருந்ததால் அவருக்கு அவமரியாதை ஏற்பட்டு விட்டு என்று எண்ணிய அவரது முரட்டு தொண்டர்கள் மாலையில் நடந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட இருக்கைகளை எடுத்துவிட்டனர்.
நலவாரியம் அமைக்கப்பட்ட முதல் நாளில் பத்திரிகையாளர்களுக்கு அறிவாலயத்தில் ஏற்பட்ட அவலநிலை? ஸ்டாலினே நிற்கிறார் நீங்கள் என்ன உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் நாற்காலிகளை எடுத்துவிட்டனர். இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பதிலடியாக நிகழ்ச்சி ஆரம்பித்ததும் நிருபர்கள், கேமராமேன்கள் கேமராவை ஆன் செய்து வைத்துவிட்டு பக்கத்தில் உள்ள கட்டடத்தில் உள்ள படிகட்டில் அமர்ந்துவிட்டனர். கலைஞர் டிவி, கேமராமேன், சில யூடியூபர் சானல் ஆட்கள் தவிர யாரையும் காணாமல் கேமரா மட்டும் ஓடிக்கொண்டிருப்பதைப்பார்த்து பிஎஸ் ஓக்கள், போலீசார், அதிகாரிகள் கையை பிசைந்துக்கொண்டிருக்கின்றனர். நலவாரியம் அமைக்கப்பட்ட முதல் நாளிலிலேயே இப்படி செய்ததால் பத்திரிகையாளர்கள் நலவாரியம் பத்திரிகையாளர்களுக்காக அல்ல? பத்திரிகை நடத்தும் முதலாளிகளுக்காக என்று வந்த நிருபர்கள் புலம்பி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu