பேரூராட்சிகளில் அதிக இடங்களை பிடித்த பாஜ

பேரூராட்சிகளில் அதிக இடங்களை பிடித்த பாஜ
X
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜ வெற்றியின் அதிகரித்துள்ளதால் கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2022ம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முந்தைய காலக்கட்டத்தைவிட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மற்ற கட்சியினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் பாஜகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் பிரச்னைகளை கையாளுவது, ஆளுங்கட்சிகள் செய்யும் தவறை தைரியமாக சுட்டிக்காட்டுவது. மக்கள் பிரச்னைகளுக்கு முன்வந்து போராடுவது என்று பல்வேறு விதத்தில் கட்சியை முன்னிலைப்படுத்தி வருகிறார். எதிர்கட்சியாக உள்ள அதிமுகவைவிட பாஜக தற்போது முன்னேறி வருகிறது என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதேபோல் இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக அளவில் பேரூராட்சியில் அதிக இடங்களை பிடித்துள்ளது. அவற்றின் விவரங்களை பார்ப்போம்.

கோவை தெற்கு மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி 2 மற்றும் 3ம் வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திருமலையம்பாளையம் பேரூராட்சியில் 3வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி தமிழரசி வெற்றி பெற்றுள்ளார். திருவட்டார் 1வது-வார்டில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. ஆர்.எஸ்.மங்களம் பேரூராட்சி 3வது வார்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குமரி மாவட்டம் குலசேகரம் பேரூராட்சி 2 வார்டில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. திற்பரப்பு 2வது, 3வது மற்றும் 4வது வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி பேரூராட்சி 1வது வார்டு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நீலகிரி கீழ்குந்தா பேரூராட்சி வார்டு 6ல் பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கோவை மாநகராட்சி 2 வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா அபார வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கானம் பேரூராட்சி 1வது வார்டு பாஜக வேட்பாளர் பூவதி அம்மாள் வெற்றி பெற்றுள்ளார். தென்திருப்பேரை பேரூராட்சி 2வது வார்டில் பாஜ வேட்பாளர் குமரேசன் வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீவைகுண்டம் 3வது வார்டு பாஜக வேட்பாளர் சங்கரி வெற்றி பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி 4வது வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி பாஜகவினரை அடுத்த முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லும் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story