ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 10.81 கோடிக்கு மது விற்பனை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் ரூபாய் 10.81 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்தமாதம் 10 ம்தேதி தளர்வுகளற்ற முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது . இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் 14ம்தேதி முதல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வேலூர் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 116 டாஸ்மாக் கடைகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 86 டாஸ்மாக் கடைகள் உள்ளன .
இவற்றில் நேற்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் குடிமகன்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது . வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் வழக்கமாக தினமும் ரூபாய் 2.5 கோடி முதல் ரூபாய் 3 கோடி வரை மதுபானம் விற்பனையாகும் . நேற்று ஒரே நாளில் ரூபாய் 3.41 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது .
அரக்கோணம் டாஸ்மாக் மாவட்டத்தில் 10 கோடி முதல் ரூ .1.80 கோடி வரை விற்பனையாகும். ஆனால் நேற்று ஒரேநாளில் 2.40கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 15.81 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 219 டாஸ்மாக் கடைகளில் ரூ .5 கோடிக்கு மதுபானம் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர் . இதேபோல் 27 மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 1165 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu