சசிகலா அதிமுகவில் இணைய 100% வாய்ப்பு இல்லை

சசிகலா அதிமுகவில் இணைய 100% வாய்ப்பு இல்லை
X
டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றதை, பலரும் அரசியல் காரணங்களை முன்னிறுத்தி யூகங்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்பி வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று டெல்லி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை. அவர் இப்போது அதிமுகவில் இல்லை. இனியும் இணைய 100 சதவிகிதம் வாய்ப்பில்லை அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என யாரும் (பா.ஜ.க.) சொல்லவில்லை. அதைப் பற்றி எந்த பேச்சும் நடத்தப்படவில்லை என டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story