கலைஞர் பிறந்தநாளில் நீண்டநாள் சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்-எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

கலைஞர் பிறந்தநாளில் நீண்டநாள் சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்-எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
X

கலைஞர் பிறந்த தினத்தில் முஸ்லிம் கைதிகள் உள்ளிட்ட நீண்டநாள் சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நெல்லை முபாரக் அஅறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக சிறைக்கைதிகளை பரோலில் விடுவிக்கவும், நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிப்பது தொடர்பாகவும் மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்று கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வெளியான உச்ச நீதிமன்றத்தின் யோசனையின் அடிப்படையிலும் தமிழக அரசு கருணை அடிப்படையில் பரிசீலித்து இந்த பேரிடர் காலத்தில் கருணை அடிப்படையில் பாரபட்சம் பாராமல் முஸ்லிம் சிறைக்கைதிகள் உள்பட அனைத்து தரப்பு கைதிகளையும் மனிதாபிமான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது.

ஆனால், சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு உயர்மட்டக்குழு அமைத்தும் முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு பரோல் வழங்கப்படவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை யாருக்கும் பரோல் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் ஜூன் 03 ம் தேதி முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர்.டாக்டர்.கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை தமிழக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் ஏறத்தாழ 38 முஸ்லிம் சிறைக்கைதிகள் 22 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை தண்டனை காலத்தை கழித்துள்ளார்கள். இவர்களில் சிலர் சிறையில் இருந்தபடியே பட்டப்படிப்புகளும், முதுநிலை படிப்புகளும் படித்துள்ளார்கள். இவர்களின் விடுதலையை எதிர்பார்த்து பெற்றோர்களும், மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.

தங்களது சிறு வயது பிள்ளைகளை பிரிந்து சிறைக்கு வந்தவர்கள் இன்றைக்கு அந்த பிள்ளைகளின் திருமணம் முடிந்த பின்னரும் தொடர்ந்து சிறைச்சாலையில் உடல் ரீதியான பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றனர். விடுதலையை எதிர்பார்த்த பல முஸ்லிம் சிறைக் கைதிகள் சிறைக்குள்ளேயே இறந்தும் உள்ளனா.

ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் தாங்கள் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கையிலும் அவர்களின் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் மற்றும் குடுமத்தினர் என அனைவரும் ஒவ்வொரு வருடமும் அரசு நமக்கு கருணை காட்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அதற்கான அறிவிப்பை ஆவலோடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் சிறைவாசிகள் அரசு நிர்ணயித்த விடுதலைக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர்கள்இவர்களின் விடுதலை கோரிக்கை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டு கோரிக்கையாகும். இந்த விவகாரத்தில் மிகவும் கனிவுடன் கருணைப் பார்வையுடன் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடுதலையை சாத்தியமாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு