தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடி -சுப்பிரமணிய சாஸ்திரி காலமான தினமின்று.

தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடி -சுப்பிரமணிய சாஸ்திரி காலமான தினமின்று.
X

பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி..

முதலாவது முனைவர் பட்டம் பெற்ற ஆய்வறிஞர்

மெட்ராஸ் யுனிவர்சிட்டி-யின் முதலாவது முனைவர் பட்டம் பெற்ற ஆய்வறிஞரும் தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடியுமான பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி காலமான தினமின்று

'தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வரலாறும் சமஸ்கிருத இலக்கியத்தோடு அவற்றுக்கான தொடர்பும்' என்ற ஆய்வுக்காக, 1930-ல் இந்தப் பெருமை கிடைத்தது. தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் அதற்கு உரை எழுதியவர்.

விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணத்தையும் எழுதியர் இவர் ஒருவரே. புறநானூற்றை ஆய்வு செய்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வடமொழி இலக்கிய வரலாறு, வடமொழி வரலாறு என்ற நூல்களை எழுதினார்.

'அன் என்கொயரி இன் டு தி ரிலேஷன்ஷிப் ஆஃப் தமிழ் அன்ட் சான்ஸ்கிரிட்', 'ஹிஸ்ட்ரி ஆஃப் கிராமாடிகல் தியரீஸ் இன் தமிழ்', 'கம்பாரிடிவ் கிராமர் ஆஃப் தமிழ் லாங்குவேஜ்', 'சங்க நூல்களும், வைதிக மார்க்கமும்' உள்ளிட்ட நூல்களைப் படைத்தார். இக்காலத் தமிழ் இலக்கணம், இந்துமத வினா-விடை, 'எ கிரிட்டிகல் ஸ்டடி ஆஃப் வால்மீகி ராமாயணா', 'சினாப்சிஸ் ஆஃப் இந்தியன் சிஸ்டம்ஸ் ஆஃப் ஃபிலாசஃபி', 'கைர்வாணி கிராந்தானு சரிதம்' உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!