போக்குவரத்துத் துறை அரசு செயலாளர்- வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்.

போக்குவரத்துத் துறை அரசு செயலாளர்- வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்.
X
பெண்களிடம் இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக் கூடாது..

போக்குவரத்துத் துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒரு பயணி நின்றாலும், அவருக்காக பேருந்தை நிறுத்தி ஏற்ற வேண்டும் எனவும் பேருந்தில் இடமில்லை என்று மகளிர் பயணிகளை இறக்கிவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும், மகளிரிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாக பேசக் கூடாது, பெண்களிடம் இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக் கூடாது. பெண்கள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணிக்க வேண்டும், குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்தி இயக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்குது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!