ரெம்டெசிவர் - இணையதள முகவரியை அறிவித்தது தமிழக அரசு.
நாளை முதல் #Remdesivir மருந்துக்கான தேவையை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும் என @mkstalin அறிவித்திருந்த நிலையில் அதற்கென https://t.co/qnhutHjzsi இணைய தள முகவரியை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது
கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்துகளை தனியார் மருத்துவர்கள் பரிந்துரைந்து வந்தனர். இதனால் இந்த மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த மருந்தை கள்ளச்சந்தையில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கும் சட்டவிரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன.
இந்தநிலையில் ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே 'ரெம்டெசிவிர்' மருந்து சிறிது பலன் தரும் என்றும், மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரியளவில் பலன் கிடையாது என்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது. இங்கு மருந்துகளைப் பெறுவோர் சிலர், அவற்றைத் தவறான முறையில் அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்த புகார்களும் வந்துள்ளன.
மேலும், ரெம்டெசிவிர் மருந்து ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிறிது பலன் தருவதாகவும், மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரிய அளவில் பலன் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
மேற்கூறிய காரணங்களைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டும்
இதன்படி, வருகிற 18-ந்தேதி (நாளை) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படடுள்ளது.
அதற்கென https://t.co/qnhutHjzsi - https://ucc.uhcitp.in/form/drugs இணைய தள முகவரியை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது
இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச் சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து அரசு சார்பாக வழங்கப்படும் என நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது அரிது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அன்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பித்தக்கது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu