ஜக்கி வாசுதேவ் விவகாரம் - இந்து முன்னணி கண்டனம்.

ஜக்கி வாசுதேவ் விவகாரம் - இந்து முன்னணி கண்டனம்.
X
அவண் இவண் என்ற ஏக வசனத்தில் அமைச்சர் பேசலாமா?

சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கையா? கொரோனா நிவாரணம் மக்கள் சேவை பணிகளில் ஈடுபடாமல் அவதூறு பரப்புவது தவறு தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தேர்தல் முடிந்து புதிய அரசாக திமுக பதவியேற்றுக் கொண்டது காரணம் நாட்டில் கொரோனா மக்களை சுனாமியாக தாக்கி அழித்துக் கொண்டிருக்கும் கொடுமையான காலகட்டம்.இக்காலகட்டத்தில் அரசு எந்திரத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர் முதல் கடைக்கோடி கடைநிலை ஊழியர் வரை மக்களைக் காப்பாற்றுகின்ற வேலையில் முனைப்பு காட்ட வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் திமுகவில் புதிதாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிகார பித்தம் தலைக்கேறி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொட்டி தான் வகித்து வரும் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தி வருகின்றார்.

ஒரு அமைச்சர் வெளியிடுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் கண்ணியமாகவும் அடுத்தவர்களை புண்படுத்தாத வகையிலும் மதிக்கத்தக்க வகையிலும் இருக்க வேண்டும். ஆனால் புதிதாக பதவியேற்றுள்ள நிதியமைச்சர் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

கோடிக்கணக்கான மக்கள் தங்களது குருவாக ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை அவன் இவன் என்று ஏக வசனத்தில் அவமரியாதையாக பேசிய காணொளி காட்சியை சில மாதங்கள் முன்பு மக்கள் அனைவரும் ஏற்கனவே கண்டுள்ளனர்.

தற்பொழுது மீண்டும் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது விழிப்பதும் பறிப்பது அவர் மேற்கொள்ளும் தலையாய வேலையாக உள்ளது தமிழக முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!